Map Graph

குஜராத் பல்கலைக்கழகம்

குஜராத் பல்கலைக்கழகம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் ஆனந்த்சங்கர் துருவ் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர். இப்பல்கலைக்கழகம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிற்பாடு 1949 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. குஜராத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்கலைக்கழகம் 260 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இப்பல்கலைக்கழகம் கல்வி ஒலிபரப்பிற்கென குரு எனும் பெயரில் 90.8 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் வானொலி சேவையைத் தொடங்கியது. இது குஜராத்தில் கல்விக்கென தொடங்கப்பட்ட முதல் வானொலி ஒலிபரப்பாகும்.

Read article
படிமம்:Gujarat_University_Tower_Building.jpg